ஊழல் பேர்வழிகள் எங்கிருந்தாலும் தராதரமின்றி தண்டிக்கப்படுவர். அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு ஒருபோதும் அரசாங்கம் பின்நிற்கபோவதில்லை. என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மீன்பிடி துறைமுகத்தை வத்தளை டிக்கோவிட்டவில் இன்று திறந்துவைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு அமைவாகவே செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் தான் சட்டத்திற்கு மதிப்பளிக்கின்றது. அத்துடன் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை அரசாங்கம் முன்னெடுக்கும். பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஒன்றிணைந்தது போல எதிர்கால சந்ததியினரை மீட்டெடுப்பதற்காக சகலரும் ஒன்றிணையவேண்டும். என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’