ஊடக சுதந்திரம் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இலங்கை தொடர்ந்தும் மிகமோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.
179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 162 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை 163வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திரம் தொடர்பான இந்த சுட்டியில், ஆசிய நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன.
எனினும் பார்மாவின் நிலை முன்னேற்றமடைந்துள்ளதால், 18 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, வடகொரியா, சீனா, வியட்னாம் என்பன தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்தும் இறுதி இடத்தில் 179ஆவது இடத்தை எரித்ரியாவும் பெற்றுள்ளன.
ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியா 9 இடங்கள் பின்தள்ளப்பட்டு 140ஆவது இடத்திலும், சீனா 173 ஆவது இடத்திலும் உள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’