வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 டிசம்பர், 2012

யாழ.மாநகர சபையூடான அபிவிருத்திப் பணிகளுக்கு விசேட நிதிஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு



யாழ.மாநகர சபையூடான அபிவிருத்திப் பணிகளுக்கு விசேட நிதிஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி பூநாறி மரத்தடியில் அமைந்துள்ள செல்வா மஹாலில் இன்றையதினம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபையின் மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம் நூல் அறிமுகவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் பங்களிப்புடன் அவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே அவற்றை திறம்பட செய்ய முடியும் என்பதற்கிணங்க யாழ்.மாநகர சபையின் முயற்சி பாராட்டுக்குரியது.

அதற்கான நிதி யாழ்.மாநகர சபையிடம் இல்லாவிட்டாலும் மாகாண சபையூடாகவும், ஏனைய நிறுவனங்கள் ஊடாகவும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது தீவகத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, பிரதேச சபைகளுக்கு தலா 100 மில்லியன் ரூபா வீதம் 300 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் யாழ்.மாநகர சபைக்கும் விசேட நிதிஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன், யாழ்.மாநகர சபைக்குட்பட்ட மயானங்கள் மட்டுமன்றி மாவட்டம் முழுவதிலுமுள்ள மயானங்கள் யாவும் புனரமைக்கப்படுவதற்கும் துறைசார்ந்தோரூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இதேபோன்று பொதுமக்களது கோரிக்கைகளுக்கும், தேவைகளுக்கும் முன்னுரிமையடிப்படையில் தீர்வு காணப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அபிவிருத்திகளையும், இன்றுள்ள அமைதிச்சூழலையும் குழப்பும் வகையில் சிலர் திட்டமிட்ட வகையில் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்பதுடன், இவ்வமைதிச் சூழலை பாதுகாத்து மென்மேலும் அபிவிருத்தியில் மேலோங்க மேலோங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்;டார்.

இதனிடையே இறந்த உங்கள் உறவுகளுக்கு தீபமேற்றுவது பிழையல்ல அமைதிச் சூழலுக்கு பாதகம் ஏற்படும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டியவர்களது செயல் நிச்சயம் கண்டிக்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர் அவர்கள் இதுவிடயம் தொடர்பில் சில பத்திரிகைகள் தவறான செய்தியைப் பிரசுரித்து மக்களை குழப்பி வருகின்றன என்றும், நாம் எதைச் சொல்லி வருகின்றோமோ அதையே செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

முன்பதாக பிரதான வாயிலிலிருந்து அமைச்சர் அவர்கள் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில்,

மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தி திட்டம் நூல் அறிமுக உரையினை யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து நூலின் முதற்பிரதியினை யாழ்.மாநகர முதல்வர் வெளியிட்டு வைக்க அதனை இந்துசமய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் பிரம்மசிறி ராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மாவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பெற்றுக் கொண்டதை அடுத்து ஏனைய அதிதிகளும் பெற்றுக் கொண்டனர்.

உரைகளை யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜெகூ, ஆசிய மன்ற தேசிய தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர் நிகழ்த்தினார்.

தொடர்ந்து சொன்ட் மற்றும் ஜெசாக் நிறுவனங்களின் பிரதிநிதி, யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட யாழ்ப்பாணம், மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுகளின் கீழான 27 கிராமசேவையாளர் பிரிவுகளின் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் பாலசிங்கம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.














  -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’