இ ரத்மலான பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானையில் கடந்த திங்கட்கிழமை 17ஆம் திகதியன்று தாயொருவரினதும் அவரது இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்பத்தில், இவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்பட்டது.
எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகள், விசாரணைகளின் அடிப்படையில் தாயும் மூத்த பிள்ளையும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னரே அறைக்கு தீ வைக்கப்பட்டிருந்தமை ஊர்ஜிதமானது.
மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான பிரதான சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதோடு கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’