வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 டிசம்பர், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடன் விளையாட்டுத்துறை மேலும் வளரும் ! வடமாகாண ஆளுநர்


மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டுதலுக்கு அமைய எதிர்காலங்களில வடமாகாண விளையாட்டுத்துறையை மென்மேலும் வளர்த்தெடுப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் வடக்குமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இன்றையதினம் நடைபெற்ற வர்ணஇரவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று வருடங்களாக வடமாகாண மாணவர்கள் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் என்பதுடன், எதிர்காலங்களிலும் இவ்வாறான சாதனைகள் தொடரப்படவேண்டும்.

மகிந்த சிந்தனைக்கு அமைவாக விளையாட்டுத்துறையை வளர்த்து அதனூடாக உடல், உள ஆரோக்கியமிக்க சமுதாயத்தை வளர்த்தெடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும். அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டுதலுக்கமைவாக எதிர்காலங்களில் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விளையாட்டுத்துறையில் மாவட்டத்தில் சாதித்த மாணவ வீர, வீராங்கனைகளும் பயிற்றுவிப்பாளர்களும் பதக்கம் அணித்து கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாகாண மட்டத்தில் விளையாட்டுத்துறைகளில் பல்வேறு பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் தேசியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் சாதித்து வடக்குமாகாணத்திற்கு பெருமை சேர்;த்த வீர, வீராங்கனைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் சகிதம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அத்துடன் சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாற்றுத்திறனாளிகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே விளையாட்டுக்களின் பயிற்சியாளர்களும், விளையாட்டுத்துறைக்கு பல்வேறு வழிகளிலும் பங்காற்றியவர்களும், பங்காற்றிக் கொண்டிருப்பவர்களும் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், மாகாண மட்டத்தில் உடற்பயிற்சிப் போட்டிகளின் போது சாதித்த பாடசாலைகளுக்கு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் தேசிய மட்டப் போட்டியில் வடக்கு மாகாணத்திற்கு 9 தங்க பதங்கங்களைப் பெற்றுக் கொண்ட அளவெட்டி அருணோதயக் கல்லூரிக்கு 5 இலட்சம் ரூபா காசோலையும், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுத்துறையில் முன்னேற்றம கண்டுவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கான நினைவுப்பரிசில்களை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் வழங்கி கௌரவித்தார்.

இதில் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.











-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’