வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 22 டிசம்பர், 2012

சபாநாயகரும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு


பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக அறிவித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்களை எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் பிரேரணையினை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தினை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’