வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 டிசம்பர், 2012

கடலுணவு பதப்படுத்தும் நிலையம் பாசையூரில் திறப்பு!


டலுணவு பதப்படுத்தும் நிலையம் திறந்து வைக்கப்படுவதனூடாக யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் பாசையூரில் இன்றையதினம் கடலுணவு பதப்படுத்தும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இந்நிலையம் திறந்து வைக்கப்படுவதனூடாக இங்குள்ள அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடியதாக இருக்கும் அந்தவகையில் குறிப்பிட்ட அமைச்சுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், ஊக்குவிப்பாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, முதற்கட்டமாக 300 பேருக்கு உடனடி வேலைவாய்ப்புக் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் 500 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்நிலையத்தினூடாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளதுடன், இதனை துறைசார்ந்தவர்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் இந்நிலையத்தினது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தாம் முழுமையான பங்களிப்பு வழங்கத் தயாராகயிருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன உரையாற்றும்போது யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள கடலுணவு பதப்படுத்தும் நிலையத்தினூடாக இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப்பெறும் அதேவேளை, துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரமும் மேம்பாடடையும் என்றும் தெரிவித்தார்.
தப்ரபேன் சீ பூட்ஸ் பிறைவேற் லிமிட்டெட் அன்னை சீ பூட்ஸ் பிறைவேற் லிமிட்டெட் ஆகிய இணைந்து யாழ்ப்பாணம் பாசையூரில் கடலுணவு பதப்படுத்தும் நிலையத்தினை அமைத்துள்ளனர்.
இங்கு கடலில் பிடிக்கப்படும் நண்டுகள் உரியமுறையில் பதப்படுத்தி, அவற்றை குறிப்பிட்ட நிலையத்தினூடாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்நிலையத்திற்கு தொழில்நுட்ப ரீதியிலான உபகரணங்களை தப்ரபேன சீ பூட்ஸ் பிறைவேற் லிமிட்டெட் மற்றும் அன்னை சீ பூட்ஸ் பிறைவேற் லிமிட்டெட கம்பனிகள் வழங்கி அதனூடாக தொழில்துறை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
30 மில்லியன் ரூபா செலவில் மேற்படி கட்டிடம் அமைக்கப்பட்டதுடன், பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து புதியகட்டிடத்தினை அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்ததுடன் புதிய கட்டிடத் தொகுதியையும் தொழிற்துறை நடவடிக்கைகளையும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சினது துறைசார்ந்த அதிகாரிகளுடன் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’