கொ ழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானமும் அதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குற்றப்பிரேரணையின் மூலமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வாறு அவர் பதவிவிலக்கப்பட்டு புதிய ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் அவருக்கு உத்தியோகபூர்வமான வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன்,பிரதம நீதியரசர் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கடந்த 11 ஆம் திகதி அறிவித்துள்ளார். அதன்பிரகாரம் குற்றப்பிரேரணையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.
மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்னரும் விசாரணைகள் தொடருமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல். ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’