கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்பு மீண்டும் அப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை
யுவதி ஒருவர் நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டு இரவு களியாட்ட விடுதியில் இருக்கின்ற ஏனையோரை அச்சம்கொள்ளச் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து களியாட்டவிடுதிக்குச் சென்ற பொலிஸார் யுவதியைக் கைதுசெய்ததுடன் பாம்பையும் பிடித்துச்சென்றனர்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டபோது போதையில் இருந்த குறித்த யுவதி மயங்கிவிழுந்தார். இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
எனினும் அவர் போதையில் இருந்தமையினால் பாம்பின் விஷம் உடலில் ஏறியிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்தப் பெண் மீது மிருகவதைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், குறித்த நாகபாம்பும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது பாம்பை தன்னிடமே ஒப்படைக்குமாறு குறித்தபெண் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த நாகபாம்பை நிபந்தனை அடிப்படையில் அவரிடமே ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணிடம் மீண்டும் பாம்பு கையளிக்கப்பட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’