வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 டிசம்பர், 2012

இந்திய அரசு கண்டிக்க வேண்டும் : கருணாநிதி


யாழ். பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் கருணாநிதி யாழ். பல்கலைகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இந்திய மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களில் சிலரை கைது செய்துள்ளனர் அதற்கு தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், வீடுகளில் ஏற்றி வைத்த விளக்குகளையும் கூடஇராணுவத்தினர் அடித்து நொறுக்கி தமிழர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள். யாழ். பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து இலங்கையின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. யாழ். பல்கலைகழகத்கதில் இடம்பெற்ற சம்பவத்தை அமெரிக்கத் தூதரகமும் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது, ஆகையால் இந்திய அரசாங்கத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்கவேண்டும். டெசோ தீர்மானங்கள் கையளிப்பு இதேவேளை, இங்கிலாந்து துணைத் தூதரான மைக் நித் வ்ரினாகிஸ் திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது டெசோ மாநாட்டு தீர்மானங்களை மைக் நித் வ்ரினாகிஸிடம் அவர் கையளித்துள்ளார். இலங்கை தமிழருக்காக இங்கிலாந்து எம்.பிக்களின் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.லண்டனில் அண்மையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளில் இக்குழுவினரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இங்கிலாந்து துணைத் தூதர் சந்தித்திருக்கிறார் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’