கொ ழும்பு நகரின் முடுக்குகளில் 65 ஆயிரம் தோட்டங்கள் உள்ளன. இவ்வாறு வாழும் மக்களுக்கு காணிகள் சொந்தமாக்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"வடமத்திய மாகாணத்துக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் மூன்று அறிவித்தல்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியது. அம்மாகாணத்தில் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கு குடிநீரில் கிருமிநாசினி, ஆசனிக் அமிலம் சேர்ந்திருப்பதாலேயே இந்நிலை உருவாகியுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் குழாய் நீரையும் பரிசோதித்தறியும் திட்டமொன்றை தயாரித்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது நாட்டிலுள்ள 10 வீதமான பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லை. கொழும்பு நகரின் முடுக்குகளில் 65000 தோட்டங்கள் உள்ளன. இவ்வாறு வாழும் மக்களுக்கு காணிகள் சொந்தமாக்குவது தொடர்பில் திட்டங்கள் இல்லை. அம்மக்களுக்கு அடிப்படை வசதியான குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’