வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 டிசம்பர், 2012

நோர்வேயின் மனித உரிமைகள் பேணலில் ஐ.நா.வுக்கு சந்தேகம்


நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சுமார் ஒரு வருட காலமாக நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் தொடர்பாக ஆராய்ந்துவந்துள்ள மேற்படி ஐ.நா. பேரவை, நோர்வே நாட்டில் மனித உரிமைகள் பேணப்படுவதிலும் சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவதிலும் தாம் திருப்தி கொள்ளமுடியாத நிலையில் இருப்பதாக பேரவையின் உயர்குழுவில் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, மனித உரிமைகள் விடயத்தில் நோர்வே வலுவான ஆதாரம் இல்லையென்றும் அது ஊர்ஜிதப்படுத்தப்படும் வகையில் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட குழுவின் தீர்மானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’