வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

'இராணுவத்தினரை திருமணம் செய்யுமாறு தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்'


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கமான 'யாழ்' என்று கூறினாலே சிங்களவர்கள் கோபப்படுகின்றனர். யாழ்ப்பாணம் உலக தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் தாக்கப்பட்டனர். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது எனவும் அவர் நினைவூட்டினார். இவ்வாறான நிகழ்வுகளை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’