இலங்கையின் தமிழருக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருபவரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான கலாநிதி பிரயன் செனவிரத்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசித்துவருபவரான பிரயன் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் தமிழ் அகதிகள் தொடர்பில் உரையாற்றவிருந்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லத் திட்டமிட்டிருந்த அவர் அந்நாட்டு விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
புதிய விதிமுறைகளின் பிரகாரம் தனக்கு சிங்கபூரிலிரிந்து மலேசியாவுக்கு செல்ல அனுமதியில்லையென விமான நிலைய அதிகாரி கூறியதாகவும் இவ் விதிமுறைகள் தொடர்பில் தான் அதிகாரிகளிடம் வினவிய போது அதனை தன்னிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லையென குறிப்பிட்டதாகவும் பிரயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் பின்னர் சிறியதொரு அறையில், புகலிடக் கோரிக்கையாளர்களுடன் 5 மணித்தியாலத்திற்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டதுடன் உணவோ, குடிநீரோ தனக்கு வழங்கப்படவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்பின்னர் தான்னை விமானமொன்றில் ஏற்றி பிரிஸ்பேனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பொப் கார் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாக பிரயன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் தொடர்பில் நீண்டகாலமாக குரல்கொடுத்து வரும் பிரயன் இச்சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கமே காரணமெனவும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’