வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கொங்கோவின் முன்னாள் இராணுவ தளபதி போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பு


கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும் கூறியிருந்தார். வழக்குத் தொடுநர்கள், நுட்ஜோலோ இந்த கொலைகளை செய்வதற்கு சிறுவர் போராளிகளை பயன்படுத்தியதாக கூறினார். நுட்ஜோலோ மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்ற நிரூபிக்கப்படவில்லை என்னும் காரணத்தால் இவரை விடுவிப்பதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கூறினார். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் குற்றவாளி அல்ல என தீர்மானிக்கப்பட்டதால், அவர் எதுவுமறியாத அப்பாவி என்று அர்த்தப்படாது எனவும் நீதிபதி அறிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’