பி ரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு பற்றி பேசுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயர் சமல் ராஜபக்ஷ எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, நீதிபதிகளுடன் பிரதம நீதியரசர்சந்தித்துப் பேசியமை தொடர்பில் இன்று விமர்சித்ததைத் அடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் யார் பேசினாலும் அது நல்லொழுக்கமாக அமையாது.
இந்த வியத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழு மட்டுமே கையாளும், இந்த விடயம் பற்றி வேறு யாரும் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அதுவே நல்லொழுக்க கோட்பாடு ஆகும்.
அத்துடன் இந்த விடயத்தில் ஊடகங்களும் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’