கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் மேற்படி அறிமுக நி;கழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
அங்கு அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது, அரசின் கொள்கைக்கு அமைய மாவட்டங்கள் தோறும் இவ்வாறான பொதுமக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தான் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் ஊடாக எதிர்காலத்தில் நல்லதொரு இயல்பு நிலை தோன்றும் என்று நான் நம்புகிறேன் என்பதுடன், இதனூடாக பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அந்நியோன்னிய புரிந்துணர்வு உண்டாக வேண்டும். கடந்த காலங்களில் தவறுகள் ஏற்பட்டு இருக்கலாம். இருந்தபோதிலும் எதிர்காலங்களில் அவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தி பொதுமக்கள் பாதுகாப்புக் குழு செயற்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ் பிரதம அதிகாரி நீல்தளுவத்த உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’