மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டியெடுத்து அதிலிருந்து அவயங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.கல்முனை, பாண்டிருப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சடலங்களைத் தோண்டி எடுத்த இனந்தெரியாதோர் அந்த சடலங்களிலிருந்து அவயங்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் பாண்டிருப்பு அன்புவெளிபுரம் கடற்கரை வீதியில் உள்ள இந்து மயானத்தின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற பொதுமக்கள் புதைகுழிகள் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த மயானத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளில் 4 சவப்பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டு அந்த சவப்பெட்டிகளை உடைத்து அதனுள் இருந்த சடலங்களை வெளியே எடுத்து அவயங்களை எடுத்து விட்டு சடலத்தை மீண்டும் அரைகுறையாக புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சூனியம் செய்வதற்காகவும் சதிவேலைகளுக்காகவும் சடலங்களின் மண்டை ஓடுகளை மந்திரவாதிகள் தோண்டி எடுத்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மண்டை ஒடு ஒன்றில் சூனியம் செய்து ஒருவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’