வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 டிசம்பர், 2012

தெரிவுக்குழு அறிக்கை மீது 8ஆம் திகதி விவாதம்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என்று அரசாங்கம்அறிவித்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப்பிரேரணை முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு காட்டுச்சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. குற்றப்பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கூடும்போது விவாதம் நடத்தப்பட்டும். அந்த அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்ததன்; பின்னர் அந்த அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’