வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 நவம்பர், 2012

அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு



மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்ட சின்னத்துரை இந்திரேஸ்வரன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நானுஓயா, பங்களாவத்தையில் 111ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. அச்சடலம் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’