பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொஹில கிழங்குக் கறியில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தமை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்களின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உணவகத்தில் கடந்த 16ஆம் திகதி சமைக்கப்பட்ட கொஹில கிழங்கு பருப்பு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. அதில் கொஹில கிழங்கு கறி வழமைக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத மரக்கறிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க சபாநாயகரால் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பகுப்பாய்வு செய்துpதிணைக்களத்தினால் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் கொஹில கிழங்கு கறியில் சயனைட் நஞ்சு கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’