ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் டெசோ மாநாட்டுத் தீர்மான அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையுடன், தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ள தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர், மேற்படி மனு மற்றும் தீர்மான அறிக்கையின் நகல்களை ஐ.நா. துணை பொதுச் செயலாளர் யான் லியாசனிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்திருந்தனர். இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை நவநீதம்பிள்ளையிடமும் குறித்த தீர்மான அறிக்கை மற்றும் மனு ஆகியவற்றை கையளித்துள்ளனர் என்று தி.மு.க அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’