பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை குற்றப்பிரேரணை மூலம் பதவியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. நீதித்துறையின் செயன்முறையில் அரச தலையீட்டை நிறுத்துவதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையின்போது உரையாற்றிய அமெரிக்க தூதுவர் எய்லின் சம்பர்லைன் டொனஹோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
இங்கு இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்துதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு தேசிய வேலைத்திட்டத்தை அமைத்தல் என்பவை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுப்படுத்தும் 18 ஆவது திருத்தம்பற்றியும் அரசியல் தீர்வு தொடர்பில் உடன்பாடு எட்டப்படாமை தொடர்பிலும் நாம் கவலையடைகின்றோம். விடுவிக்கப்பட்ட பகுதிகள் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவம் மக்களின் அன்றாட விடயங்களில் தலையிடுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தை 2012 இலிருந்து பாதுகாப்பு அமைச்சு கட்டுப்படுத்துகின்றது. காணாமல்போதல், சித்திரவதை, சட்டத்துக்கு மேலான கொலைகள், கருத்து வெளிப்பட்டு சுதந்திரம் பயமுறுத்தலுக்கு உள்ளாதல் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை தண்டிக்கும் முயற்சிகள் காணப்படவில்லை. நீதித்துறையில் நிர்வாகம் தலையிடுவதை கண்டித்த நீதிபதி தாக்கபட்டுள்ளார். மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் ஒரு சட்டமூலத்தை எதிர்த்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த வகையில் பலவித உரிமை மீறல்கள் தண்டனையின்றி தொடர்கின்றன. இவற்றை கருத்தில்கொண்டு அமெரிக்க பின்வரும் பரிந்துரைகளை செய்கின்றது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்தல் அரசசார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையை சிவில் நிர்வாகம் ஒன்றிடம் வழங்குதல் கருத்து வெளிப்பாட்டு சுந்திரத்தை பாதுகாத்தல் மனித உரிமை மீறல்கள் தண்டிக்கப்படாது விடப்படுவதை நிறுத்துதல் பிரதம நீதியரசரை குற்றப்பிரேரணை ஒன்றின் மூலம் பதவி விலக்க எடுக்கும் முயற்சியின் பின்னணியில் நீதிதுறையின் சுதந்திரத்தை வலுவூட்டும் வகையில் அரச தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’