புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்னோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் புலியுறுப்பினர்கள் சிலரை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பொலிஸ் சான்று கோரப்படுவது வழக்கம். எனவே புனர்வாழ்வு பெற்றுள்ள புலி உறுப்பினர்கள் பொலிஸ் சான்று பெறும்போது அதில் முன்னாள் புலி உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்படும் போது அந்த நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்படும். எனவேதான் அவர்களுக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’