வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 நவம்பர், 2012

கேபியிடம் இந்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை: ஒத்துக்கொண்டார் அமைச்சர் கெஹெலிய



கேபி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனிடம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைகளை மேற்கொண்டது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று ஒப்புக் கொண்டார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அமைச்சர் ஒப்புக்கொண்டார். அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த மத்திய புலனாய்வுப் பிரிவும் (சிபிஐ) இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் குமரன் பத்மநாதனை இரண்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தினார்கள் என இந்திய செய்திகள் தெரிவித்திருந்தன. இச்செய்தி தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் 'ஆம்' என பதிலளித்தார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’