வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 அக்டோபர், 2012

மனிதாபிமானத்திற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் சவால்: ஜனாதிபதி மஹிந்த



கல மனிதாபிமானத்திற்கும் வளர்ச்சியடைந்த நாடுகளே சவாலாக இருக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் உலக சக்தி மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர் "சில அபிவிருத்தி அடைந்த நாடுகளிடம் நிலையான சுற்றுப்புற சூழல் நட்பு அல்லது நெறிமுறைகள் இல்லை. வளங்களை பகிர்ந்து கொள்ளாமையினால் சக்தியில் பாரிய வித்தியாசங்கள் மற்றும் பெரும் குறைபாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் எடுக்கின்ற இவ்வாறான தீங்கு விளைவிக்க கூடிய நடவடிக்கையினால் சகல மனிதாபிமானத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. ஆசிய பொருளாதார வளர்சி மைல்கள் வேகத்தில் இருக்கின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆசியாவின் மக்கள் வறுமையை வெளியே இழுத்தெடு;த்தனர். இது விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக சூழ்நிலையை உருவாக்கியது. அபிவிருத்தி அடைந்த நாடுகளும் நீண்ட கால மற்றும் பயன் தரக்கூடிய எரிசக்தி வளம் எது என்பதை சரியாக தெரிவு செய்ய வேண்டும்" என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’