நெ டுந்தீவில் கடற்படையினரால் மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறை (தொழில் அனுமதி) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கடற்படையினர் நேற்றைய தினம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் பாஸ் (தொழில்) அனுமதி பெற்றுக் கொண்டதன் பின்னரே கடற்தொழிலில் ஈடுபடவேண்டுமென பணிப்புரை விடுத்தனர். கடந்த காலங்களில் இவ்வாறான பாஸ் நடைமுறையால் தாம் எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாகவும், நீக்கப்பட்டிருந்த பாஸ் நடைமுறையை கடற்படையினர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தாம் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதுடன் இவ்விடயம் தொடர்பில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை கவனத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவிடயம் தொடர்பில் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கடற்படை அதிகாரிகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ்நடைமுறையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதனையடுத்து இப்பாஸ் நடைமுறையை உடனடியாக நீக்குவதற்கும் தமது கடற்றொழிலை இயல்பாக மேற்கொள்ளுவதற்கும் உதவிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்களுக்கும், ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச அமைப்பாளர் தானியேல் றெக்சியன் (ரஜீவ்) அவர்களுக்கும் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’