வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 அக்டோபர், 2012

தாமதமின்றி அரசியல் தீர்வு காணவும்: பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தல்



லங்கையில் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு தாமதமின்றி விரைவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதியின் மனித உரிமை விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவுக்கும் ஐ.நா செயலாள நாயகத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இச்சந்திப்பு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் பான் கீ மூன் கூடிய கவனம் செலுத்தியதாக மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார். முழுமையான பொறுப்புக்கூறலுக்கான சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான, நம்பகமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்த சுதந்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி காலநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்னவும் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நியூயோர்க்கிற்கான பிரதிநிதி ஐவன் சிமோனோவிக்கும் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’