வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 அக்டோபர், 2012

கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம் அதிக வளங்கள் கொண்டமையும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



மது அரசாங்கம் பாரபட்சமற்ற வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

மஹிந்தோதய திட்டத்திற்கு அமைவாக விஞ்ஞான தொழில்நுட்ப கூடத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை யாழ்.கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் அப்போதைய அரசாங்கங்கள் பாரபட்சம் காட்டியும், உதாசீனப்படுத்தியும் வந்தன.

எனினும், இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நிலைமை மாறிவிட்டது.

இன்று எமது அரசாங்கம் நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுமளவில் சமநிலையான அபிவிருத்தி முன்னெடுப்புக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த அழிவு யுத்தம் காரணமாகவும், ஏனைய இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இம்மாவட்டங்களை எமது அரசு அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் இப்பாடசாலைக்கென புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கட்டிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது இநந்தப் பாடசாலையை அதிக வளங்கள் கொண்ட பாடசாலையாக மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இனிப்புகளையும் வழங்கினார்.


-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’