இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன இலங்கையின் டுவென்டி டுவென்டி அணிக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நேற்றைய இறுதிப் போட்டிக்குப் பின்னரே மஹேல இவ்வாறு அறிவித்தார். உலக டுவென்டி டுவென்டி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தேர்வாளர்களுடன் இதுகுறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே இத்தொடர் முடிவில் தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர்களுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார். தன்னைப் பொறுத்தவரை இலங்கை அணி முன்னோக்கிச் செல்வதற்கு இளைய வீரரொருவர் தேவைப்படுவதாகவும், இளைய வீரரொருவர் தனது தலைமைப் பதவியை டுவென்டி டுவென்டி போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பாக அமையும் எனவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார். இலங்கை டுவென்டி டுவென்டி அணியின் அடுத்த தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உப அணித்தலைவரான அவர், இலங்கை அணியின் அடுத்த தலைருக்கான பொறுப்பிற்காக அதிக எதிர்பார்ப்புகளுடன் வளர்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இடம்பெற்ற உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’