வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 அக்டோபர், 2012

இழப்புக்களை ஈடுசெய்ய அனைவரும் உழைகக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாகவும், உள்ளூர் நெற்செய்கையாளர்களை ஊக்குவித்து அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்;டத்திற்கமையவும் இப்புதிய நெற்களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 கிளி.கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நெற்களஞ்சியசாலையை இன்றையதினம் (05) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இதனூடாக நெற்செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தக் கூடியதாக அமையுமெனவும், அதனடிப்படையிலேயே எமது வாழ்வாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அரசுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

யுத்தகாலத்தின் போது எமது மக்கள் உயிர் உடமைகளை இழந்துள்ள போதிலும், உயிர்களை திரும்பப் பெறமுடியாத துர்ப்பாக்கியம் இருந்த போதிலும், ஏனைய இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தமது கோரிக்கைக்கு அமைய மத்திய நெற்களஞ்சியசாலையை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் அவர்களுக்கும், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களுக்கும், நெற்செய்கையாளர்களுக்கும், மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் மீள்குடியேற்றத்தின் பின் இங்கு சில கூட்டுறவுச்சங்கங்கள் துரிதகதியில் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்த வளர்ச்சியில் அரசும் தனது கணிசமான பங்களிப்பினை செலுத்திவருகிறது. அத்தோடு கூட்டுறவுச்சங்கங்களில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த அர்ப்பணிப்புடன் எமது ஒத்துழைப்பும் என்றும் கூட்டுறவின் வளர்ச்சிக்காக இருக்கும்.

யுத்த காலத்தில் கூட்டுறவுச்சங்கங்கள் தங்களது பெறுமதிமிக்க  பல மில்லியன் கணக்காண சொத்துக்களை இழந்துள்ளன. ஆனால் இன்று அதிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் கூட்டுறவுச்சங்கங்களுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான நிர்வாக கட்டமைப்பு அவசியம். அதனை விரைவில் ஏற்படுத்தி வெற்றிகரமான கூட்டுறவுச்செயற்பாடுகளுக்கு வழிவகுக்க வேண்டும். நான் உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்திருக்கின்றேன். அந்த வகையில் கிளிநொச்சியில் பளை கூட்டுறவுச்சங்கத்தில் ஜனநாயக ரீதியில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது போன்று மாவட்டத்தின் ஏனைய பிரதேச கூட்டுறவுச்சங்கங்களும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கரைச்சித் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நெற்களஞ்சியசாலைக்கு உடன் அதிகவலு மின்சாரம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். பொருளாதாhர அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் 5,473,376,15 ரூபா செலவில் மேற்படி நெற்களஞ்சியசாலை மீள் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.











->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’