வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 அக்டோபர், 2012

களுத்துறையில் வாழ்வெழுச்சி கண்காட்சி ஆரம்பம்!



த்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வெழுச்சி (திவிநெகும) கண்காட்சி களுத்துறை மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

களுத்துறை திஸ்ஸ மத்தியகல்லூரியில் இன்றையதினம் (13) மேற்படி கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் இவ் வாழ்வெழுச்சி கண்காட்சி நடாத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது கைத்தொழில் துறையின் மேம்பாடு தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படுவதுடன் குறிப்பிட்ட துறைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு, அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்களும், அவற்றுடன் 16 நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கெடுத்து வருகின்றன.

இதனடிப்படையில் இன்று நாளையுமாக இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற இக்கண்காட்சியில் 50 தொழில்சார் நிறுவனங்களின் 100 வரையான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றை பாடசாலை மாணவர்கள் தொழில்துறைசார்ந்தோர், மக்கள் என பெருமளவானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

முன்பதாக ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்லூரியின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து தேசியக் கொடியையும் ஏற்றிவைத்தார்.

கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசஅதிபர் யு.டி.சி ஜெலால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்வெழுச்சி எழுச்சி கண்காட்சி மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான விளக்கவுரையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி நிகழ்த்தியதைத் தொடர்ந்து களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜானக பிரியந்த பண்டார, சிரேஸ்ட அமைச்சர் எ.எச்.எம் பௌசி, மேல்மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் அங்கவே, துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்த்தன, ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து காட்சிக்கூடங்களை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அவை தொடர்பில் துறைசார்ந்தோருடனும் கலந்துரையாடினர்.

பத்துஇலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய மாவட்ட குடிசைக்கைத்தொழில் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 22 வது மாவட்டமாக களுத்துறை மாவட்டத்திலும் இக்கண்காட்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மேல்மாகாண சபை உறுப்பினர்களான சுகத்மத்துகமகே, லலித்எல்லவல, மிக்கும்குணசேகர, பியால் நிசாந்த ஆகியோருடன் களுத்துறை நகர மேயர் நைபர் மற்றும் வாழ்வெழுச்சித் திட்டப் பணிப்பாளர் கமகே, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

















-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’