நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது பாரதூரமானதாகும். ஆதலால் அழுத்தங்களுக்கு அடிபணியாது சந்தேக நபரை நீதிமன்றத்தில் கூடியவிரைவில் ஆஜர்படுத்துமாறு கல்கிஸை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு கல்கிஸை பிரதான நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் பொலிஸாருக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணையின்போது கல்கிஸை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அத்துல்ல ரணகல்ல, பொலிஸார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்னவின் வாழ்க்கை தொடர்பில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றனரே தவிர, குற்றவாளியே கைதுசெய்யும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். சட்டதரணியின் குற்றச்சாட்டை மறுதலித்த பொலிஸார் அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பான விசாரணை முறையாக முன்னெடுக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்துவதற்காக சந்தேக நபர்கள் வருகை தந்ததாகக் கூறப்படும் வாகனம் தொடர்பில் கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். தனது நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது பாரதூரமான சம்பவமாகும் என்று சுட்டிக்காட்டிய பிரதான நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’