வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 அக்டோபர், 2012

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நன்கறிவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


கி ளி.அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நெற்களஞ்சியசாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கோணாவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (5) கிளிநொச்சி கோணாவில் பகுதியில் பொருளாதாhர அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் 4.3 மில்லியன் ரூபா செலவில் மீள் கட்டுமானம் செய்யப்பட்ட நெற்களஞ்சியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள், சேதமடைந்த வீதிகள் ஊடாக பயணிக்கின்ற போது மக்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளை நான் நன்கறிவேன் என்பதுடன், கடந்த காலங்களைப் போலல்லாது தற்போது ஒரு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அளவுக்கதிகமான விலை கொடுத்துள்ளனர். இதற்கு எமது அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

இருந்த போதிலும் எதிர்காலத்தில் இப்பகுதி மக்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகளுக்காக வாகனவசதி, வீதிப்புனரமைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விடயங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

1958 ம் ஆண்டு முதல் அப்பகுதியில் அக்கராயன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கான நெற்களஞ்சியம் செயற்பட்டு வந்த போதிலும், யுத்த காலத்தில் முழுமையாகச் சிதைவடைந்த நிலையில் தற்போது மீளப்புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திருமதி. மதுமதி வசந்தகுமார் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’