வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 அக்டோபர், 2012

கல்வித் தகைமையுடன் மேலதிக தகைமைகளையும் வளர்த்துக் கொண்டவர்கள் இலகுவாக வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்கின்றனர் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்



பிவிருத்தியை நோக்கி நகரும் யாழ்ப்பாணம் என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்; இன்று தேசியதொழில் வங்கி ஒன்று உருவாக்கம் பெறுகின்றது. யாழ்ப்பாணம் அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இவ்வங்கியின் தேவை இன்று இங்கு அவசியமாகியுள்ளது என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) -

இன்று(03) யாழ்.நகர்ப்பகுதியில் தேசிய தொழில் வங்கியினைத்திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில். அபிவிருத்தி என்று எதுவும் நடைபெறவில்லை மக்களின் வாழ்வில் முன்னேற்றங்கள்; ஏற்படவில்லை என்ற கருத்துக்களுக்கு இன்றைய தொழில் வங்கியின் உருவாக்கம் சரியான பதிலை வழங்கியிருக்கின்றது. அரச வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற கனவு இன்றைய அனைத்து இளைஞர் யுவதிகளிடமும் காணப்பட்ட போதும். யுத்தமுடிவுக்குப்பின்னர் அரச திணைக்களங்களின் வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன. அண்மையிலே இரண்டாயிரம் பட்டதாரிப்பயிலுனர்கள் யாழ்.மாவட்டத்திலே உள் வாங்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் நிரந்தர நியமனங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் ஆகவே அவர்கள் அனைவரையும் உள்வாங்கக்கூடிய வலு எமக்குண்டு என்பதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் எனக்குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் அரசதிணைக்களங்களில் வருடாந்தம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரே உள்வாங்கப்படுவார்கள்.  ஆனால் தனியார் நிறுவனங்களில் அதிகமான வேலை வாய்ப்புக்களை பெறமுடியும்  அங்கு சிறந்த தகைமையுடையவர்களுக்கு அதிக சம்பளங்கள் வழங்கப்படுகின்றன ஆகவே எமது இளைஞர் யுவதிகளும்  அவ்வாறான தனியார்துறைகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான மேலதிக அறிவினையும் தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் தேர்ச்சியினையும் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை பல்கலைக்கழகங்கங்களிலிருந்து வருடாந்தம் நாலாயிரம் வரையான பட்டதாரிகள் வெளியேறுகின்றனர் இவர்களில் 80 சதவீதமானவர்கள் கலைப்பட்டதாரிகள். அவர்களி;ன் கனவுகள் ஆசிரியராகவேண்டுமென்பதே ஆனால் இன்று வடமாகாணத்தில்  மூவாயிரம் வரையான ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆளணி இருக்க வேண்டுமென்பது அரச நியதி ஆனால் இங்கு 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் வளம் உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் சில விசேட பாடங்களுக்கான ஆசிரியர்களைத்தவிர பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது.; ஆகவே பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் பட்டதாரிகளும் மேலதிக தகைமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவகையில் பல்கலைக்கழகங்கள் செயற்பட வேண்டும் அதனூடாகவே அவர்கள் எந்தத்துறைகளிலும் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைமை உருவாகும். என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு  இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்வங்கி மேலும் தமது சேவையை விஸ்தரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தொழில் வங்கியின் முகாமையாளர் சறோஜினி நாகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ.பல்கலைக்கழக தொழில்சார் ஆலோசகரும் விவசாய பீடாதிபதியுமான பேராசிரியர் மிகுந்தன் மத்தியவங்கியின் வடமாகாண முகாமையாளர் சிவதீபன் யாழ்.பல்கலைக்கழக வெளிவாரிப்பட்ட இணைப்பாளர் சிவராஜா யாழ்.கைத்தொழில் வணிகமன்றத்தலைவர் பூரணச்சந்திரன் நல்லூர் பிரதேசசெயலர் சுபாஜினி தொழில்திணைக்கள பணிப்பாளர் ராகவன் மற்றும் நிறுவன பணிப்பாளர் நகுலன். ஆகியோரும் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளும்  கலந்து கொண்டனர்.










->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’