6 கிரிக்கெட் நடுவர்கள் போட்டிகளில் தவறான முடிவுகளை வழங்கவோ அல்லது போட்டியின் விபரங்களைக் கையளிக்கவோ தயாராக இருந்தமையை இந்தியத் தொலைக்காட்சியின் புலனாய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருந்திருந்தார்கள். இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நடுவர்கள், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு நடுவர் என மொத்தமாக 6 நடுவர்கள் இவ்வாறு அகப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இந்தப் புலனாய்வு நடவடிக்கையில் இலங்கையைச் சேர்ந்தவர்களான காமினி திஸாநாயக்க, மௌரிஸ் வின்ஸ்டன், சாகர கலகே ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கௌரி, அன்னீஸ் சித்திக்கி ஆகியோரும், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் ஷா என்ற நடுவரும் அகப்பட்டுள்ளனர். இதில் பங்களாஷேின் நதீர் ஷா சர்வதேசப் போட்டிகள், பிராந்தியப் போட்டிகள், வேறு ஏதாவது போட்டிகள் ஆகியவற்றில் தவறான முடிவுகளை வழங்க ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் ஆட்டமிழப்புக்களை தவறாக வழங்க ஒப்புக் கொண்டதோடு பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷெத் - பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் போட்டிகளில் தவறுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். சாமர கமகே, காமினி திஸாநாயக்க, அன்னீஸ் சித்திக்கி ஆகியோர் பணத்திற்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடத் தயாராக இருப்பாகத் தெரிவித்துள்ளார். இதில் சாமரக கமகே அண்மையில் முடிவடைந்த இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக டுவென்டி டுவென்டி பயிற்சிப் போட்டிகளின் நான்காவது நடுவராகக் கடமையாற்றியிருந்தார். அத்தோடு ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகளிலும் ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடத் தயாரா இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். காமினி திஸாநாயக்க ஒருபடி மேற்சென்று குறித்தளவு பணம் தரப்படுமாயின் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் சபையிலுள்ள அதிகாரிகளுக்கு மதுபானத்தையும், சுற்றுலாக்களையும் வழங்கினால் அவர்கள் எந்தவிதமான வேலையையும் முடித்துத் தருவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதேவேளை, வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் சம்பந்தப்பட்ட போட்டி நிர்ணய, ஸ்பொட் ஃபிக்சிங் மற்றும் தகவல்களை வழங்குவது சம்பந்தமான புலனாய்வு நடவடிக்கையின் முடிவுகளில் நடுவர்கள் சிலர் வீரர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இதில் பங்களாதேஷ் நடுவரான நதீர் ஷா பாகிஸ்தானின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான நசீர் ஜம்ஷெத் - பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் போது போட்டிகளை நிர்ணயம் செய்ததாகத் தெரிவித்தார். நசீர் ஜம்ஷெத் - பாகிஸ்தான் சார்பாக உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றியிருந்தார். பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணியின் முகாமையாளரான மின்ஹஷுடின் கான், பாகிஸ்தானின் அதிரடி வீரரான அஷார் மஹமூட் ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரின் போது போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு அவர் பாகிஸ்தான் வீரர்களான ஷகிட் அப்ரிடி, ரானா நவீட் உல் ஹசன், அஹமட் செஷாத் ஆகியோர் போட்டிகள் நிறைவடைந்ததும் விபசாரப் பெண்களை அழைத்துக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தப் புலனாய்வு நடவடிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை, குறித்த நடுவர்கள் எவரும் உத்தியோகபூர்வ உலக டுவென்டி டுவென்டி தொடர் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு இது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படும் எனவும், அதற்காக குறித்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’