வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 அக்டோபர், 2012

மட்டக்களப்பில் மின சூறாவளி; 20 வீடுகள் சேதம்; ஒருவர் காயம்



ட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட 35ஆம் கொலணிப்பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று மாலை திடீரென ஏற்பட்ட இந்த மினி சூறாவளி காரணமாக சில வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் சில வீடுகளில் மரம் வீழ்ந்ததால் சேதமடைந்துள்ளன. இதன்போது ஒரு வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டதால் ரோகினி (36வயது) என்ற பெண் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைப்பகுதியில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவருக்கு தலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் மூன்றாவது தடவையாக இப்பகுதியை மினிசூறாவளி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’