தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண 13ம் திருத்தச்சட்டமும் அதற்கு மேலான அதிகாரங்களும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வாழ்வு எழுச்சித் திட்டமும் (திவிநெகும) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்றையதினம் கொழும்பு உயர்நீதிமன்றில் வைத்து இதுகுறித்த தமது கருத்தாடல்களைத் தெரியப்படுத்திய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை ஆரம்ப இலக்காக வைத்து தமிழ் பேசும் மக்களின் உரிமைப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதனையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்துள்ளோம். இதனை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள்கூட காலங்கடந்தேனும் அதனை தற்சமயம் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதேசமயம் தற்போது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வாழ்வெழுச்சித் திட்டமானது (திவிநெகும) சமுர்த்தி உதவி பெறுவோருக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோருக்கும் நேரடியாக பல வரப்பிரசாதங்களை வழங்கக் கூடிய ஓர் சிறந்த திட்டமாகும்.இதனடிப்படையில் 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அதற்கு மேலான அதிகாரங்களுடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அதேவேளை வாழ்வெழுச்சித்திட்ட அமுலாக்கமும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொண்டுள்ளது என தெரியப்படுத்தினார்.-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’