யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வாழ்வாதார உதவிகள் சரியான முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையக அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோர் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தை இன்று மதியம் 2.00 மணிக்கு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்னிப்பகுதியில் 80 சதவீதமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதுடன் மக்களுக்கான உதவிகள் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வருகின்ற போதும் இதற்கான அனுமதயினை அரசாங்கம் வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் யுத்தம் முடிந்து அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை செய்து வந்தாலும் யுத்தத்திற்கான காரணங்கள் தொடர்பாக அராய்ந்து அதற்குரிய தீர்வை வழங்க இன்னமும் முன்வரவில்லை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று அரசாங்கம் மறைமுகமாக சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்துவருகின்ற போதும் படைக்குறைப்பு மற்றும் மீள்குடியேற்றங்கள் என்பன திருப்தி அற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் எடுத்துக்கூறினார். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும். அவ்வாறு தேர்தல் நடைபெற்றால் மாத்திரமே இங்கு ஜனநாயகம் மலரும் என்றும் இது தொடர்பாக அவர்களிடம் மகஜர் ஒன்றும் கைளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைத்தீவை புத்த பெருமான் பெரும்பான்மை மக்களுக்காக வழங்கியதாகவும் இது பெரும்பான்மை இனத்தவருக்கு சொந்தமானது என்றுகையில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற நோய் தற்போது பரவியுள்ளதாக ஆயர் எடுத்துக்கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் இராணுவக்குறைப்பு திருப்தி ஏற்படவில்லை என்றும் யுத்தகாலத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’