இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருப்பதாக இராணுவ உயர் மட்டத்தை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாடியுள்ளார்.
'குண்டர்களால் தாக்கப்பட்ட மேற்படி அப்பாவி அதிகாரிக்குக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு இராணுவம் தயாராகுவதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் மேற்படி இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதன்மூலம் இராணுவ உயரதிகாரிகள் தமது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்' என சரத்பொன்சேகா கூறினார். இராணுவத் தளபதியாக தான் பதவிவகித்த காலத்தில் இவ்வாறன சம்பவம் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை கைது செய்யப்படுவதை தான் உறுதிசெய்திருப்பார் எனவும் பொன்சேகா கூறினார். "அதிஷ்டவசமாக நானம் தொழில்சார் அதிகாரிகளாக இருந்தோம். இராணுவ அதிகாரியையோ சிப்பாயையோ இவ்வாறு நடத்தும் நிலைக்கு இறங்கியிருக்க மாட்டோம். குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை நான் நிச்சயம் உறுதிப்படுத்தியிருப்பேன். நான் இராணுவத் தளபதியாக இருந்திருந்தால் மாலக்க சில்வா கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்தியிருப்பேன்" என அவர் தெரிவித்தார். மாலக்க சில்வா கைது செய்யக் கோருவதற்கு முன்னர், சரத் பொன்சேகா தனது மருமகனை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சில்வா கூறியதாக வெளியான செய்திகள் குறித்து பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், அனைத்து பிரஜைகளுக்கும் சட்டமானது சமத்துவமாகவும் நீதியாகவும் பிரயோகிக்கப்படும்போது தனது மருமகன் நீதிமன்றத்திற்கு முகம்கொடுப்பார் எனக் கூறினார். 'எனது மருமகன் என்னுடன் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என எமக்குத் தெரியாது. மாலக்க சில்வா பகிரங்கமாக காணப்படுகிறார் களனி விகாரைக்கும் அமைச்சரான தனது தந்தையுடன் சென்றுள்ளார். எனது மருமகன் மூன்றுவருடங்களாக மறைந்து வாழ்க்கிறார். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எனது மருமகனை எனது எதிராளிகள் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்து கொல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஏற்படும்போது அவர் வெளியே வருவார்' என பொன்சேகா தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’