வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இந்தோனேஷியாவில் தத்தளித்த இலங்கையர்கள் படகிலிருந்து இறங்க மறுப்பு



வுஸ்திரேலியா நோக்கிச் சென்றபோது இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 53 பேர் தமது படகிலிருந்து இறங்க, மறுப்பதுடன் உணவு மருந்துகளையும் பெறுவதற்கு மறுப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 பெண்கள் மற்றும் 3 சிறார்கள் உட்பட 53 பேர் சுமத்ரா தீவுக்கு அருகிலுள்ள மேந்தாவை எனும் சிறிய தீவில் தத்தளித்த நிலையில் செப்டெம்பர் முதலாம் திகதி மீட்கப்பட்டதாக சிகாகப் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சூர்ய நெகாரா இன்று தெரிவித்துள்ளார். 'அவர்கள் கிறிஸ்மஸ் தீவை நோக்கிய தமது பயணத்தை தொடர வேண்டும் எனக் கூறி படகிலிருந்து இறங்குவதற்கு மறுக்கின்றனர். பயணத்தை தொடர்வதற்காக 2000 லீற்றர் எரிபொருளை அவர்கள் கோருகிறார்கள்' என நெகாரா கூறியுள்ளார். இந்தோனேஷிய குடிவரவு அலுவலகத்திற்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் எழுதிய கடிதமொன்றில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புடன் தாம் தொடர்புகொண்டுள்ளதகாவும் ஆனால் அத்தீவு வெகு தொலைவில் இருப்பதால் அங்கு செல்வதற்கு அவகாசம் தேவைப்படும் என நெகாரா கூறியுள்ளார். 'இதுவரை உணவு அல்லது மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கின்றனர். ஆனால் எமது அவதானிப்பின்படி அவர்களின் படகில் இன்னும் போதிய உணவுகள் உள்ளன' என அவர் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’