வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மும்மொழிக் கொள்கைத் திட்டம் சமாதான சகவாழ்வுக்கு முக்கியமானது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



க்கிய இலங்கையின் சமாதான, சக வாழ்விற்கு மும்மொழிக் கொள்கைத் திட்டம் அவசியமானது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-->யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அரச கருமமொழிகள் திணைக்களத்தின் முன்மொழிக் கொள்கைத் திட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நிகழ்ச்சி முக்கியமானதென்பதுடன், வரவேற்கத்தக்கது என்றும், இது தொடர்பில் கருத்துரை வழங்கியவர்கள் இந்நூல் தொடர்பாக பகிர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்பட்ட  போருக்கு ஒரு மொழிக் கொள்கையும் காரணமாக இருந்ததுடன், அந்த வகையில் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் இந்த ஒரு மொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் தற்போது இம்மும்மொழிக் கொள்கைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், ஐக்கிய இலங்கைக்குள், சமாதான சகவாழ்வு வந்ததில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தினூடாக பெரும்பான்மையினத்தவர்கள் தமிழ் மொழியையும் தமிழர்கள் சிங்கள மொழியையும் இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இதனை சகலரும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தற்போது இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தென்இலங்கையின் சுதந்திரம் தங்கமென்றால் வட இலங்கையின் ஒருபோதும் தகரமாக இருக்க முடியாது என்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசகரும் மும்மொழிக்கான ஜனாதிபதி செயலணியின் உபதலைவருமான சுனில் பர்ணாந்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயலணியின் பணிப்பாளர் திருமதி கிருஸ்ணமூர்த்தியும் நூல் தொடர்பான விளக்கவுரைகளை பேராசிரியர் தர்மராச கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நந்தசார நிகழ்த்தியதைத் தொடர்ந்து கருத்துரைகளும் இடம்பெற்றன.

இதன்போது யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், கிளிமாட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பேராசிரியர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’