வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 செப்டம்பர், 2012

கிளிநொச்சி மாவட்டத்திற்கான புதிய சந்தைத் தொகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார்.


கிளிநொச்சிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் புதிய சந்தை கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 284 மில்லியன் ரூபா நிதிஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய சந்தைக் கட்டிடத்தில் இதுவரையில் 38 மில்லியன் ரூபாவிற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இவற்றில் மரக்கறி,மீன், இறைச்சி கடைத் தொகுதிகள் நிறைவுபெற்றுள்ளன.

மேலும் 03 புதிய கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியிலேயே கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் இயங்கி வந்த போதிலும் யுத்தகாலத்தின் போது முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் நவீனமுறையில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.








 -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’