மி ச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றுங்கள்' என மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கை குலுக்குவது அங்கே - கழுத்தறுப்பது இங்கேயா?' என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் மத்திய அரசுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கடித விவரம் பின்வருமாறு: "தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்ஷ இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும், மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்துவைப்பதையும் எதிர்த்தும்கூட, இந்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல; மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற்பதும், அவருக்கு பிரதமரே விருந்தளிப்பதும் மரபுப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் எந்த அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்துகிறது என்பதை ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்டுள்ள அனைவரும் அறிவர். சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டும் பல்வேறு காரியங்களுக்கு அவர்களின் நட்பைப் பயன்படுத்திக் கொண்டும், இரண்டு நாடுகளையும் தங்களுக்கு மிக அணுக்கமாக வைத்துக் கொண்டும், இந்தியாவை மிரட்டும் பாணியில் இலங்கை அரசு செயல்படுவதை, இலங்கையிலே நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்து வருவோர் நிச்சயமாக அறிவார்கள். இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது என்றுநாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இந்திய அரசு அதை நம்புகிறதா? நம்பிச் செயல்படுகிறதா? நம்பிடவே இல்லையா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்திய அரசுக்கு இதை மேலும்ஆதாரங்களோடு தெரிவிப்பது நம்முடைய கடமை என்ற முறையில் ஒருசிலவற்றைத் தெரிவிக்கவிரும்புகிறேன். 19-9-2012 'தினமணி' இதழில், 'இலங்கை - சீனா இடையே 14 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்படி ரூ. 4,180 கோடி செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே சீனாவின் உதவியுடன் இலங்கையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது மீண்டும் பலஉதவிகளைச் செய்து இலங்கையுடனான தனது உறவை சீனா வலுப்படுத்தியுள்ளது.சீனகம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோ வுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரானவூ பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற் கொண்டுள்ளார்.அப்போது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின்படி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவிஆகியவற்றை இலங்கைக்கு சீனா அளிக்க விருக் கிறது. இவை தவிர இலங்கை உள்கட்டமைப்புவசதிகளுக்காக சீன வங்கிகள் கடனளிக்க இருக்கின்றன.ஆனால் இது தொடர்பான முழுவிவரங்கள் வெளியிடப்படவில்லை.அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது, எல்லையில் விமான தளங்களை அமைப்பது என இந்தியாவுக்கு பல்வேறு பிரச்சினைகளைகொடுக்கும் சீனாவுக்கு இலங்கை மிகவும் நெருங்கிய நட்பு நாடாக மாறி யுள்ளது.இதனால் இருநாடுகளும் சேர்ந்து எதிர் காலத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கவும் வாய்ப்பு உள்ளது'என்று விரிவாக 'தினமணி'யில் வந்துள்ள செய்தி, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே எந்தஅளவிற்கு நட்பு வளர்ந்துள்ளது என்பதைத் தெளிவாக்கும். மும்பையை தீவிரவாதிகள் தாக்கியது போல தென்னிந்தியாவைத் தாக்க சதித் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி தமீம்அன்சாரி என்பவன் கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அவனிடமிருந்து இலங்கையில் உள்ள சம்பத் வங்கியின் ஏ.டி.எம். கார்டு ஒன்றினையும் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர் என்ற செய்தியும், இலங்கையில் ஐ.எஸ்.ஐ. மையம் ஒன்றை நிறுவி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள நட்பின் ஆழத்தைத் தெளிவாக்குகிறது. இந்திய மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக் காமல் தொடர்ந்து தாக்கி வருகின்ற இலங்கை,அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,சீன நிறுவனம் ஒன்று அந்தக் கடலில் மீன் பிடித்து வருகிறது. நமது தமிழக மீனவர்கள் இலங்கைக்கடற் படையினரால் தாக்கப்பட்டு பிடிக்கப்பட்ட போது, அவர்கள் சீன நாட்டைச் சேர்ந்த சிலரை இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்த அளவிற்கு இலங்கைக்கு நட்பு இருப்பதால்தான்,இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதிலும், கொடுமை புரிவதிலும், கொன்று குவிப்பதிலும் இலங்கைஅரசு தீவிரம் காட்டுகிறது. அந்த உண்மையை நம்முடைய இந்திய அரசும் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருவதோடு, தற்போது இலங்கை அதிபரை வரவேற்பதிலும் அக்கறை காட்டுகிறது. 20-9-2012 அன்று 'இந்து'நாளிதழில் நிரூபமாசுப்பிரமணியன், ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் எழுதிய நீண்ட கட்டுரையில், அதுவும் ராஜபக்ஷே இந்தியாவிற்கு வருகை தரும் நாளில் அந்தப் பெரிய, முக்கிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்டுரையின் முக்கிய சில பகுதிகளை மட்டும் இங்கே தந்துள்ளேன்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று மூன்றாண்டுகள் கழிந்த பின்னரும்,அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் இலங்கை ராணுவம் அதன் 19 பிரிவுகளில், 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.'இந்து' இதழில் உள்ள தகவல்படி, யாழ்ப் பாணத்தில் 3 பிரிவுகளும், கிளி நொச்சியில் 3பிரிவுகளும், முல்லைத் தீவில் 3 பிரிவுகளும் வவுனியாவில் 5 பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 2 பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் 3 பிரிவுகளும்வைக்கப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர். அரிகரன் அவர்கள்; இலங்கை யின்வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப்பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்ற காட்சியளிக்கின்றது என்றுகுறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து இலங்கை இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதுபோருக்குப்பின் உள்ள சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குவதாக அமைந்துள்ளது.இலங்கையைச் சேர்ந்த ஜனநாயக ஆர்வலர், அகிலன் கதிர்காமர் என்பவர் தமிழர்கள்வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பது பெரும் கவலை அளிப்ப தாகவும், போருக்குப் பின் இலங்கை முழுவதை யும் இராணுவ மையமாக்கும் முயற்சியாகவே இதுதெரிகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அரசே நியமித்த எல்.எல்.ஆர்.சி. எனும் ஆணையம் அளித்துள்ள முக்கியபரிந்துரைகளில் ஒன்று; இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தின் அளவை வெகுவாகக் குறைத்திட வேண்டும் என்பதுதான். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே தமிழ்ப் புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும், சீனாவும் உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார். 'இந்து' நாளிதழே 20-9-2012 அன்று வெளி யிட்டுள்ள ஒரு பக்கக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்கனவே நமது கவனத்திற்கு வந்ததின் அடிப்படையிலேதான், அதனை மனதிலே கொண்டு கடந்த 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டில்பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்தியப் பிரதமருக்கு அப்போதே அனுப்பியிருக் கிறோம். 'இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம்மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில்தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது.காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப் பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற் றைக்காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில்தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சி களும் நடத்த முடியாது. இராணுவத்தினரே அங்கு மாவட்ட ஆட்சிய ராகவும் அரசு நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன்றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம்போலக் காட்சியளிக்கிறது. ஜனநாயக அடிப்படையிலான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அங்குள்ள தமிழர்களுக்குத் தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசவும், அமைதியான முறையில் போராடவும் வழியில்லை. அவர்கள் எப்போதும் பெரும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். பலர் சித்திரவதைமுகாம்களில் சொல்லொணாத வேதனைக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப் பட்டு வருகிறார்கள்.தமிழ்ப் பெண்கள், இராணுவப் படையினரால் பாலியல் வன்முறை உள்ளிட்ட பலகொடுமைகளுக்கு ஆளாக்கப் படு கின்றனர். தமிழ்க் குழந்தைகள் துப்பாக்கி களைப் பார்த்துக்கொண்டு, இராணுவப் படையினர் கட்டவிழ்த்துவிடும் வன்முறையால் பாதிக்கப்பட்டு,முடிவில்லாத அச்சத்துடன் வாழ்கின்றனர்.போரின் பின் விளைவாக ஏறத்தாழ 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு அறிக்கை கூறுகின்றது. இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர் காலத்தை மேலும்அச்சுறுத்தும் வகையில், அவர்களின் மீது சிங்கள இராணுவத்தினர் பாலியல் வன்முறைகள்உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளைச் செய்து வருகிறார்கள். எனவே தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடி யாக இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம்கொடுக்க வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. இராணுவத் தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.''டெசோ' மாநாட்டின் இந்தத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும், விரைவில்ஐ.நா. மன்றத்தில் நேரடியாகவே கொடுக்க இருக்கிறோம். இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து இலங்கை முழுவதையும்சிங்களமயமாக்குவதிலும், பௌத்தமயமாக்கு வதிலும் தீவிரம் காட்டி வருவதை உலக அரசியல்பார்வையாளர்கள் அனைவரும் அறிவர். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்த முயற்சிகள் இலங்கைத் தீவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அரசும் இலங்கையி லிருந்துதமிழினத்தை அறவே துடைத்தெறிவ திலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வரு கின்றன.இலங்கையில் தமிழர்கள் இருப்பதை சிங்கள அரசு இந்தியாவின் நீட்சியாகவே கருதி பகை பாராட்டிவருகிறது. இந்திய நாடு எவ்வளவு உதவிகளைச் செய்தாலும், எவ்வளவு ஆழமான நேசத்தோடுகரம் கொடுத்தாலும், அதையேற்று போற்று வதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. மாறாக இந்தியாவோடு வேற்றுமை கொண்டுள்ள நாடுகளான பாகிஸ்தானோடும், சீனாவோடும் தான் நட்பை வளர்த்துக் கொள்ள இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்பதை நான்மேலே எழுதியுள்ள பல்வேறு குறிப்புகளும் தெளிவாக்கும் என்றே நம்புகிறேன். இந்தக் குறிப்புகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. எனவே இனியாவது விழித்துக் கொண்டு, சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேயும் விரிக்கும் வஞ்சகவலையில் விழுந்துவிட வேண்டாமென்றும், மிச்சமிருக்கும் ஈழத் தமிழர் களையாவது காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வா தாரத்தையும், வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் உலகத் தமிழர்களின்சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’