ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அங்கு அவர்கள் எதைப்பற்றி பேசவுள்ளனர் என கேட்டபோது, 'எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மட்டும்தான் நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் கூறினார். சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தேசிய பிரச்சினையில் தமிழ்நாடு மட்டுமன்றி முழு இந்தியாவுமே அக்கறையாக இருப்பதை இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு என்பவை தொடர்பாக ஏற்புடைய தீர்வொன்றை விரைந்து காணுமாறு இந்தியா வலியுறுத்தியதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’