இ ந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
'இலங்கையர்கள் தமிழ் நாட்டிற்கு பயணம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையையை நாம் கவனத்திற்கொண்டுள்ளோம் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு உட்பட இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களின் நெருக்கமான கலந்தாலோசனையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறினார். சில முக்கிய விஜயங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்னறிவிக்கப்படாமல் இடம்பெற்றமையும் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான வரலாற்று, கலாசார, இனத்துவ மற்றும் சிவில் உறவுகளில் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு முக்கிய அங்கமாகும் என்பதை நான் கண்டுள்ளேன். கொழும்பிலுள்ள எமது உயர் ஸ்தானிகராலயம் கடந்த வருடம் சுமார் 200,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு சுமார் 175,000 இலங்கையர்களுக்கு விஸா வழங்கியுள்ளது" என அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’