வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 செப்டம்பர், 2012

வலிப்பு நோய் விழிப்புணர்வு நடைபவனியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.



காதாரஅமைச்சினதும், கல்வியமைச்சினதும் ஒழுங்குபடுத்தலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வலிப்பு நோய் விழிப்புணர்வு நடைபவனி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடமாகணத்தில் முதற்தடவையாக யாழ்.மாவட்டத்தில் வலிப்புநோய் தொடர்பான இவ் விழிப்புணர்வு பேரணி இன்றையதினம் இடம்பெற்றது.

போதனா வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதி, பருத்தித்துறை வீதியூடாக நகர்ந்து யாழ்.மத்திய கல்லூரி சந்தியை சென்றடைந்தது.

அங்கு அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது நூலகத்திற்கு மங்கள வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டதுடன் அங்கு தேசியக் கொடியினை அமைச்சர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

வலிப்புநோய் தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு சுலோகங்களைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சமூகத்தினர், சுகாதார அமைச்சைச் சார்ந்தோர் மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்றிருந்த பிரதான நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் னுச. ரஞ்சினி கமகே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், தென்பகுதியிலிருந்து வருகை தந்த வலிப்பு நோய் சம்பந்தமான நிபுணர்களுடன், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் னுச.பவானந்தாஜா உள்ளிட்ட பல்துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.  

இதன்மூலம் வலிப்பு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப் பேரணியின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.





-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’