பணப்பித்து நோயால் பீடிக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கம், ஊழியர் சேமலாப நிதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு இப்போது ஏழை மக்களின் சமுர்த்தி நிதியத்தை திவி நெகும சட்டம் மூலம் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த அரசாங்கத்துக்கு கடுமையான நோய் ஒன்று பிடித்துள்ளது. இது பணம், நிலம், அருஞ்செல்வங்கள், கலைப்பொருட்கள் எதையும் விட்டுவைப்பதில்லை. நாம் பெருமளவான அருஞ்செல்வங்களையும் கலை நுணுக்க பொருட்களையும் இழந்து நிற்கின்றோம். கலிங்க நாட்டரசனான மகான் ஆட்சிக் காலத்தில் கூட இந்த மாதிரியான அழிவுகளை நாம் காணவில்லை என ஐ.தே.க.வின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்கம் வட மாகாண வட மத்திய மாகாண விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு தருவதாக கூறிய அரசாங்கம், அவர்களுக்கு கோழிக்குஞ்சுகள், மண்வெட்டி அலகுகள், பானை, சட்டி ஆகிய பொருட்களையே கொடுத்து வருகின்றது. அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களை வேட்பாளர்களாக நியமிக்கப்போவதில்லை என கூறிய அரசாங்கம், இதிலும் மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’