வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 29 செப்டம்பர், 2012

அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சாத்வீகப் போராட்டம் ஆரம்பமாகும்: சம்பந்தன்



மிழ் பேசுகின்ற மக்கள், தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தாயகத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று ஒருமித்த நாட்டில் காணப்படாத நிலை தொடருமானால், பாரிய சாத்வீகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நாம் பின்னிற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் நிலையானதும் நிரந்தரமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு கட்டாம் ஏற்படும். இதில் சர்வதேசம் உறுதியாக இருக்கின்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு முன்னர் மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் புதிய கிழக்கு மாகாண சபையின் 11 உறுப்பினர்களும் திருகோணமலை புனித மரியாள் தேவாலயம், மூர் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயல் மற்றும் ஆலடி விநாயகர் ஆலயம், காளி கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர். சம்பந்தன் முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’