உலக நாடுகள் தொடர் அச்சுறுதல்களுக்கு ஆளாகியிருக்கும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி ராணுவத்தை அனுப்ப தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அதிபர் புஷ் காலத்தில் ஆரம்பமான ஈராக் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியுடன் 2008 வருட தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார். அதை நிறைவேற்றும் வகையில், ஈராக்கிலிருந்து ராணுவத்தை படிப்படியாக திரும்ப்பெற்றார். அதன் மூலம் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக மிச்சப்படுத்தி அமெரிக்க பொருளாதார முன்னேறத்திற்கு திருப்பியுள்ளார் என கூறப்படுகிறது. ஈராக் போர் முடிவுக்கு வந்ததையொட்டி இரண்டாம் ஆண்டு நினைவு விழா டெக்சாஸ் மாகாணம் போர்ட் ப்ளிஸ் நகரில் நடந்தது. அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ராணுவ வீர்ரகளின் மத்தியில் கூறுகையில் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக ராணுவத்தை அனுப்ப தயங்க மாட்டேன் என்றார். அதே வேளையில், கண்டிப்பாக தேவை என்ற நிலையில் தான் உங்களை அனுப்புவேன். அந்த நேரத்தின், போர் முனையில் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி பக்கபலமாகவும் இருப்பேன் என்றும் கூறினார். குடியரசு கட்சி மாநாடு முன்னதாக வியாழக்கிழமை நிறைவுபெற்ற குடியரசு கட்சியின் டாம்பா மாநாட்டில் மிட் ராம்னி, அதிகார பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டார். தனது ஏற்புரையின் போது ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக சாடியிருந்தார் ராம்னி. ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளினால், அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாகவும், பொருளாதாரத வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஈராக் போர் நினைவு தினத்தில் ஒபாமா பேச்சு, ராம்னியின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே அமைந்ததாகவே கருதப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’